தனது அறிவிப்பில் இருந்து திடீரென பின்வாங்கிய அதிபர் சிறிசேன

போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிவிப்பில் இருந்து இலங்கை அதிபர் சிறிசேன, திடீரென பின்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற சிறிசேன, 2015ம் ஆண்டு போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஐநா மனித உரிமை கவுன்சில், இலங்கை ராணுவம், விடுதலை புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐநா கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், அதிபர் சிறிசேன தனது அறிவிப்பில் இருந்து திடீரென பின்வாங்கியுள்ளார். எந்த தலையீடும் இல்லாமல் தங்கள் பிரச்சனையை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக புகார் கூறுபவர்களுக்கு பதில் அளிக்க குழு அனுப்பப்படும் என்று அதிபர் சிறிசேன கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version