கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு -அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்வதற்காக தமிழக அரசு 21,000 சிறப்பு பேருந்துளை இயக்கி வருகிறது. பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர், கே.கே நகர், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகளை சந்தித்து, குறைகள் உள்ளனவா என கேட்டறிந்தார். இதேபோல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் சந்தித்து, அவர்களது கருத்துக்களை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேற்றிரவு 11மணி நிலவரப்படி 3252 அரசு பேருந்துகள் மூலம் 1.90 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார். இரண்டு நாட்களில் 3.75 லட்சம் பொதுமக்கள் அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளதாவும் குறிப்பிட்டார்.

 

Exit mobile version