வெற்றிகரமாக வான்நோக்கி பாய்ந்த ஆகாஷ் -1எஸ் ஏவுகணை

நிலத்திலிருந்து வான்நோக்கி பாயும் ஆகாஷ் -1எஸ் என்ற பாதுகாப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றம் அபிவிருத்தி கழகம் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்நிலையில் நிலத்திலிருந்து வான்நோக்கி இலக்கை தாக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் -1எஸ் ஏவுகணையை தற்போது வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏவப்பட்டுள்ள நாக், அக்னி, திரிசுல் மற்றும் பிரித்வி ஏவுகணைகளை காட்டிலும் தற்போது ஏவப்பட்டுள்ள ஆகாஷ் -1எஸ் ஏவுகணை மிகுந்த திறன்மிக்கது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 25 கிலோமீட்டர் இலக்கை வேகமாக சென்று தாக்கக்கூடியது.

இந்த ஏவுகணை திட்டமானது கடந்த 2015ல் இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏவுகணைகளை தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதன்மூலம் இந்திய விமானப்படை பல்வேறு எல்லைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

Exit mobile version