பேட்ட வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட திரைப்படத்தின் வெற்றி விழாவை அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

காசி திரையரங்கில் பேட்ட படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பட்டாசு வெடித்து, ரஜினி படப்பாடல்களுக்கு நடனமாடி ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில், திரையரங்கிற்கு வந்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேட்டை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றும், படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன பின்பும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல் உள்ளது என்றும் குறிப்பிட்டார். அடுத்து தனுஷை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version