பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கதால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பன்ஸின் வடக்கு தீவு பகுதியான படானஸ் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவான நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானீர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கதால் அந்நாட்டின் இட்யாபாத் நகரில் சாந்த மரியா தேவாலயம் பெரிதும் சேதமடைந்து அதன் மணி கோபுரம் முற்றிலும் தடைமட்டமானது. இந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர்.