செங்கல்பட்டு அருகே, நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யநேரி பகுதியை சேர்ந்த மாணவி, கடந்த 12ம் தேதி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தேர்ச்சி கிடைக்குமா என்ற அச்சத்தில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தோல்வி பயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 40 சதவீத தீக்காயமடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக பொய் வாக்குறுதி அளித்ததை அப்படியே நம்பி, பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக, தேர்வை சரிவர எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து இளம் மாணவ, மாணவிகளை இழந்து வருகிறோம். நீட் தேர்வு காரணமாக மாணாக்கர்கள் தற்கொலை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவுறுத்தியுள்ளதை மனதில் வைத்து, மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.