நாகை அருகே நிலத்தடி நீர் மற்றும் கடல் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வானகிரியை சுற்றி ஏராளமான இறால் பண்ணைகள் செயல்பட்டு வருவகின்றன.இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் இருப்பதாக மீனவர்கள் கூறி வருகின்றனர். இக்கிராம மீனவர்கள் புயல் மற்றும் வெள்ளக்காலங்களில் தங்களது படகுகளை பாதுகாக்க காவிரி ஆற்றில் இருந்து கால்வாய் தோண்டி அதில் படகுகளை நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில், அந்த கால்வாயை சுற்றி போடப்பட்டிருந்த மண்ணை இறால் பண்ணையினர் எடுத்துள்ளனர். இதனால் அங்கு படகுகளை நிறுத்துவது கேள்விக்குறியானதால், படகு துறையில் திரண்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காவிரி ஆற்றில் இறங்கி இறால் பண்ணைகளை தடை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.