சென்னையில் போராட்டம் நடத்த 15 நாட்கள் தடை!

அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளுக்கு சென்னையில் போராட்டம் நடத்த 15 நாட்கள்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

வடசென்னை, வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி,  சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம் மற்றும் பொதுகூட்டத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,வழக்கமாக நடைபெறும் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, ராஜரத்தினம் மைதானம் போன்ற இடங்களிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

28-ஆம் தேதி இரவு முதல் மார்ச் 14 ஆம் தேதி இரவு வரை 15 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருமண ஊர்வலம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம் எனவும் காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version