கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை, பெருங்குடி உள்ளிட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் லாரி ஒன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
திடீரென கட்டணமானது 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனைக் கண்டித்து கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 250 ரூபாய் என உயர்த்தப்பட்ட கட்டணத்தை,150 ரூபாயாக குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.