பள்ளிபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இந்தநிலையில் கூலி உயர்வு, 8 மணி நேர வேலை, அரசு விடுமுறை தினங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து 12ம் கட்டமாக விசைத்தறி உரிமையாளர்களுக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இடையேயான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 சதவீத சம்பள உயர்வினைதொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.