நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்று, டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதே போன்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
இடதுசாரி தலைவர்கள் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் இதில் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் எதிர்கொள்வது, நாடாளுமன்ற கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 21 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்தக் கூடத்தில் கலந்து கொண்டனர்.