ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 5 ம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.அதே நேரம் ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தடைபட்டது. இதனால் தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்துக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 20ம் தேதி ஒடிசா,மேற்குவங்கம்,கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் நீட் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 20ல் நீட் தேர்வை நடத்த அனுமதி அளித்தது. பெங்களூருவில் ரயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது