2008-க்குப் பிறகு பெரும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள், வர்த்தக முடிவில் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக, இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில், நேற்று ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது. அதே போன்று, இன்று காலையிலும் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, வர்த்தகம் ஓரளவிற்கு மீண்டெழுந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டெண், ஆயிரத்து 325 புள்ளிகள் அதிகரித்து, 34 ஆயிரத்து 103 புள்ளிகளில் முடிவுற்றது. அதேபோல், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 365 புள்ளிகள் உயர்ந்து, 9 ஆயிரத்து 955 புள்ளிகளோடு வர்த்தகம் நிறைவைடந்தது.