ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கின் விசாரணை இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே நாசகார வாயுக்களை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேதாந்தா நிருவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடிசெய்ய வேண்டும் என தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் பிரதான விசாரணை ஜூன் 27ம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தது. இதனிடையே இவ்வழக்கில் வேதாந்தா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்கள் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை எனவும் ஆலையை திறக்க உத்தரவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது