ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சார்பில் வாதங்களை முன்வைக்கவும், பொதுமக்களின் கருத்துக்களை கேட்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு தூத்துக்குடி பகுதிகளில் ஆய்வு நடத்தி, கடந்த செப்டம்பர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் அக்குழு ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றது.
பின்னர், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை எழிலகம் வளாகத்தில் இக்குழு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வாதங்கள் கேட்கப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் விசாரணை குழுவிடம் கொடுக்கப்பட்டன.
இந்தநிலையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் வாதம் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு, பிறகு ஸ்டெர்லைட் தரப்பு மற்றும் மக்கள் தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு வருகிறது.
Discussion about this post