சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த நீராவி எஞ்சின் ரயில்

நாகர்கோவில் ரயில் சந்திப்பில் இயக்கப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில், 1885 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதும், கிட்டத்தட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான நீராவி எஞ்சின் ரயில் வந்தடைந்ததையடுத்து ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவீன வசதிகளுடன் கூடிய நீராவி எஞ்சின் நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்பட உள்ளது. மேலும், படங்களிலும் பாட புத்தகத்திலும், பார்ந்த நீராவி எஞ்சின் ரயிலை நேரில் பார்த்தது வியப்பை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ரயில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Exit mobile version