தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர்.ஜெயவர்தனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் முக்கியப் பகுதிகளான வேளச்சேரி, திருவான்மியூர், கிண்டி, தியாகராயநகர், எம்.ஜி.ஆர் நகர், மேற்கு மாம்பலம், மயிலாப்பூர், தசரதபுரம், ஜாபர்கான்பேட்டை ஆகிய இடங்களில் அதிமுக கூட்டணியினருக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது நிறைவேற்ற இயலாத திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மத்தியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகர மக்கள் எளிதாக பயணம் செய்ய அதிமுக அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவதை சுட்டிக்காட்டினார்.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 2 வது பாதை விரைவில் அமைக்கப்படும் என்றார்.