இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்த வாய்ப்பு

இலங்கை மாகாண சபைகளின் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் தேதி குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அதிபரின் பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இலங்கை சுதந்திர கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆலோசனை நடத்தினார்.

அதிபரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இலங்கை அதிபருக்கான பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதற்கு சிறிசேனா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு கட்சியினரை தயார் செய்யும் வகையிலேயே இந்தக் கூட்டத்தை அவர் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், 2019 ஜனவரி மாதத்தில் அதிபர் தேர்தல் அறிவிப்பை சிறிசேனா வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version