இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான உளவுத்துறையின் எச்சரிக்கையை கவனிக்கத்தவறியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 321 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குண்டுவெடிப்பு தொடர்பான உளவுத்துறையின் எச்சரிக்கையை கவனிக்கத்தவறியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை அதிபர் சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார்.