சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஆளுநருக்கு சபாநாயகர் அழைப்பு

நாளை துவங்க உள்ள  சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க, ஆளுநரை நேரில் சந்தித்து சபாநாயகர் தனபால் அழைப்பு விடுத்தார்.

2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்  நாளை தொடங்குகிறது.   ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆளுநர் உரைக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். இந்த நிலையில், ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற சபாநாயகர் தனபால், சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தொடரில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்தும் விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version