விரைவில் அறிமுகமாகும் மாருதி கார் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாடல்கள்

மாருதி செலிரியோ மற்றும் ஆலட்டோ கே10 கார்களின் பிஎஸ்-6 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே பிஎஸ்-6 எஞ்சினுடன் கார்களை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் எஸ் பிரெஸ்ஸோ காரை அறிமுகம் செய்த மாருதி நிறுவனம் அடுத்து இரண்டு பிஎஸ்-6 மாடல்களை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

மாருதி கார் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடல்களாக விளங்கும் செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களின் பிஎஸ்-6 மாடல்கள்தான் விரைவில் சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு ஏற்கனவே பிற கார்களில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களிலும் இந்த பிஎஸ்-6 எஞ்சின் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version