சோன்பதரா சுரங்கத்தில் 160 கிலோ தங்கம் மட்டுமே உள்ளது : இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம்

உத்தரபிரதேச மாநிலம் சோன்பதரா பகுதியில் உள்ள சுரங்கத்தில் 160 கிலோ தங்கம் மட்டுமே உள்ளதாக, இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

சோன்பதரா பகுதியில் உள்ள சுரங்கத்தில் மூவாயிரம் டன்னுக்கும் அதிகமாக தங்கம் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மூவாயிரம் டன் தங்கம் இருப்பதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சுரங்கத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மட்டுமே, புவியியல் ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தியாகவும், அதன்பிறகு ஆய்வு நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version