சூரிய கிரகணத்தை காண முடியாமல் ஏமாற்றமடைந்த மோடி

வானில் இன்று நிகழ்ந்த வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு மக்களைப் போல தானும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்ததாகவும் ஆனால் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டரில் வானத்தில் சூரியனைத் தேடுவது போல தனது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். தங்களுடைய படம் இன்று மீம்ஸ்களாக வைரலாகும் என டுவிட்டர் வாசி ஒருவர் கமாண்ட் அடித்திருந்தார். அதற்கு ரீடுவிட் செய்த மோடி வாழ்த்துக்கள் வரவேற்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் வானத்தைப் பார்க்கும் புகைப்படம் பல்வேறு ஹேஷ்டேக்குகளில் இணையவாசிகளால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version