தமிழ்நாட்டில், மின்வெட்டுக்கான பழியை அணில் ஏற்றுவந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி பழிபோடுவதற்கு மற்றொரு ஜீவன் சிக்கியுள்ளது. ஆம், அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பது பாம்பு.
முந்தைய அதிமுக ஆட்சியில், மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், மின்வெட்டு என்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. இதன் காரணமாக, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு விளக்கமளித்த திமுகவின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அணில்கள்தான் காரணம் என கூறினார். இதனை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கேலி செய்துவந்தனர். இந்தநிலையில், ஈங்கூர் திங்களூர் 100 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் உள்ள B-Phase கண்டக்டர் பழுதானதாகவும், அதற்கு காரணம் பாம்புதான் என, தனது ட்விட்டரில் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். மின்வெட்டுக்கு காரணமாக, அணில் மீது பழி போட்டுவந்த செந்தில்பாலாஜிக்கு, தற்போது பழியை ஏற்பதற்கு பாம்பு சிக்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.