போலீசார் மீது தாக்குதல் நடத்திய செம்மரக் கடத்தல்காரர்கள்

திருப்பதி அருகே போலீசார் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி அடுத்த சந்திரகிரி மண்டலம் பீமவரம் வன சரகத்திற்கு உட்பட்ட பாலகொண்டா என்ற இடத்தில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, செம்மரக் கடத்தல்காரர்கள் எதிர்திசையில் வந்துள்ளனர். அவர்களை பிடிக்க, செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் முயன்றபோது, கடத்தல்காரர்கள் போலீசார் மற்றும் வனத்துறையினர் மீது கற்களை வீசியும், கோடாரிகளை கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது, போலீசார் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதில் தப்பியோடிய மற்றவர்களை பிடிப்பதற்காக கூடுதல் அதிரடிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள 25 செம்மரக்கட்டைகளை அதிரடி படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version