தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழ்றசி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழைப் பெய்யக்கூடும் எனவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலையில் லேசன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி பாரன் ஹீட்டும், மதுரை மற்றும் வேலூரில் 106 டிகிரி பாரன் ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளாது. கரூரில் 104 டிகிரி பாரன் ஹீட்டும், சென்னையில் 97 டிகிரி பாரன் ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.