தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழையும், காலை நேரத்தில் லேசான தூறலும் பெய்தது. பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்வதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.