உலக யானைகள் தினம் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, வரும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் யானை தந்தங்கள், தந்தங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆபாரணங்கள், சீப்பு போன்ற பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய தடை விதிக்கவுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக அரசு சாரா நிறுவனங்கள், யானை தந்த வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
அதனடிப்படையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தடைகளை மீறுபவர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனையும், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் தாங்கள் வைத்திருக்கும் தந்தங்களை தடை காலம் அமலுக்கு வந்தவுடன் அரசிடம் ஒப்படைக்கவோ, அல்லது அவர்கள் வைத்து கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது