டார்ச் லைட்டை தனது கட்சியின் சின்னமாக வைத்தும் கமலுக்கு பார்வை கோளாறு உள்ளதோ என பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்
புயல் வரும் பாதையை துல்லியமாக கணித்து எச்சரிக்கை விடுத்த இந்த விண்வெளி ஆராய்சி நிறுவனத்தையோ, மீட்பு பணியில் ஈடுபட்ட பேரிடர் வீரர்களையோ, ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளித்த பிரதமரையோ பாராட்ட மனம் இல்லாமல் வாய் மூடி மவுனமாக கமல் இருந்து விட்டு, ஒரிசா முதல்வரை மட்டும் பாராட்டுவது பாரபட்சமானது என தெரிவித்துள்ளார். மேலும் டார்ச் லைட்டை சின்னமாக வைத்திருக்கும் கமலுக்கு பார்வை கோளாறு உள்ளதோ என எண்ண தோன்றுவதாக கேள்வி எழுப்பியுள்ளார்.