ஊட்டி உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகள், வணிக வளாகங்களுக்கு சீல்

உதகையில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, வீடு கட்டும் உரிமம் பெற்று, கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைத்துள்ள அனைத்து கட்டடங்களுக்கும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

உரிய அனுமதியின்றி செயல்படும் உணவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அடுத்த ஒரு வாரத்தில் சீல் வைக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version