மதுரையில் 5 ரூபாய்க்கு தேநீர் விற்கும் கடைக்காரர்- குவியும் பாராட்டுகள்

பால் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை என்று ஐந்து ரூபாய்க்குத் தேநீர் விற்பனை செய்து வரும் கடை உரிமையாளரின் சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலை சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு இந்த விலையேற்றத்தை அறிமுகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தேநீர் விலை 10ரூபாயில் இருந்து 15 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் சேவை செய்யும் நோக்கோடு ஐந்து ரூபாய்க்குத் தேநீர் விற்பனை செய்ய முடிவு செய்தார் பட்டதாரி இளைஞர் ராஜாராம். தனது தகப்பனார் அன்புச்செல்வத்துடன் இணைந்து இந்தத் தொழிலைத் தொடங்கினார்.

நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் பால் வியாபாரத்துடன், தேநீர் வியாபாரத்தையும் செய்து வருகிறார். இந்தத் தேநீர்க் கடைக்குப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும் விலை மலிவாகக் கிடைப்பதாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version