விருதுநகரில் திமுக கூட்டணியின் வேட்பாளர் நவாஸ்கனியின் பிரசாத்தின் போது பொதுமக்களின் போதிய வரவேற்பு இல்லாததால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி பிரச்சாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்ட அவர், செல்லும் இடங்களில் மக்களின் கூட்டம் இன்றி வெறிசோடி காணப்பட்டது. பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க முடியாமல் சிறுவர்களை அழைத்து வந்த திமுகவினர், வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரச்சாரத்திற்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில், அவரும் வராதது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், விரைவாக பிரச்சாரத்தை முடித்த நவாஸ் கனி புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் திமுக கூட்டணி கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.