கோடை சீசனை முன்னிட்டு உதகையில் வாரத்தின் ஏழு நாட்களும் சிறப்பு மலை இரயில்கள் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் உதகை – கேத்தி இடையே சிறப்பு இரயில் இயக்கப்பட்டு வந்தது. கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வாரத்தின் ஏழு நாட்களும் உதகை – கேத்தி இடையேயான சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் கோடை விடுமறையை உற்சாகமாக கழிக்க வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.