வட கொரியாவின் ராணுவ அச்சுறுத்தல்களை தடுக்க சியோல் தயாராக உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் டூ தெரிவித்துள்ளார்.
தென் கொரியா தலைநகரில் தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங்-டூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வடகொரியாவின் “இராணுவ அச்சுறுத்தல்களை” தடுக்க சியோல் தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும் பியோங் யாங் மற்றும் கிழக்கு கடற்கரையில் இரண்டு குறுகிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக வந்த செய்திகளை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்தார். அதன்படி வடகொரிய ஏவிய ஏவுகணைகளை தென்கொரிய ராணுவம் கண்காணித்துள்ளதாகவும், இதை எதிர்த்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.