திருவள்ளூரில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காந்தி நகர் அருகே உள்ள சோலையம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டில் காரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செங்குன்றம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தகவலின்பேரில் செங்குன்றம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் உரிமையாளர் மோகன்ராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version