தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி துவங்க உள்ளநிலையில் அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் முதல் கட்டமாக 2000 ஏக்கரில் அறுவடை பணிகள் துவங்க உள்ளன. இந்த நிலையில் விவசாயிகள், தனியார் வியாபாரிகள் மூலம் நெல் விற்பனை செய்யும் சுழல் ஏற்படும் என்பதாலும், நெல் மூடைக்கு 900 ரூபாய் மட்டும் கிடைக்கும் என்பதாலும், அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,நெல்
மூடைக்கு 1200 முதல் 1300 வரை கிடைக்கும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.