சத்தீஸ்கரில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு -தேர்தலுக்கான இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

சத்தீஸ்கரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளின் அனல் பிரச்சாரத்துடன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, 72 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பொருட்களை அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 11-ம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.

Exit mobile version