பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ராஜமடம் கீழ்த்தோட்டம் மீனவர்கள் கடலில் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு அதிகாலை கரை திரும்பிய போது, தங்கள் வலையில் சிக்கியது அரிய வகை கடல் பசு என தெரியவந்தது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் அதிகமாக காணப்படும் கடல் பசுக்களை பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும். இதையடுத்து மீனவர்கள் மாவட்ட வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

வனச்சரகர் மற்றும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் அங்கு வந்து பிடிபட்ட கடல் பசுவை ஆழமான பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனர்.

இதற்கு உதவிய மீனவர்களுக்கு இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version