சாலையில் சர்வ சாதாரணமாக ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்த பள்ளி மாணவர்கள்

பள்ளிச் சிறார் இருவர் சாலையில் செல்லும் போது சர்வ சாதாரணமாக செய்த ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமீபத்தில், பள்ளிச் சிறார் இருவர் சாலையில் நடந்து சென்ற போது, திடீரென சம்மர் ஷாட், கார்ட்வீலிங் ஆகிய ஜிம்னாஸ்டிக் சாகசங்களை அடுத்தடுத்து மேற்கொண்டனர். ஜிம்னாஸ்டிக்கில் சற்றுக் கடினமான இந்த சாகசங்களை, பள்ளிப் பிள்ளைகள் இருவர் சாலை ஓரத்தில் சர்வ சாதாரணமாகச் செய்து காண்பித்து அசத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவியது.

ஜிம்னாஸ்டிக்கில் 5 முறை தங்கம் வென்ற ரோமானிய வீராங்கனை நாடியா கோமனேசி, இது அற்புதமாக இருப்பதாகப் பதிவிட்டிருந்தார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்ததை அடுத்து, இந்தச் சிறுவர்களின் வீடியோ மேலும் பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜசிகா கான், ஆஜாஜுத்தீன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.சமூக வலைத்தளங்களில் வைரலானது தனக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக ஜசிகா கான் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நாடியா கோமனேசி போல் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு நடனத்தில் தான் ஆர்வம் என்றும் ஜிம்னாஸ்டிக்கில் சாதித்தாலும் நடனத்தைப் விட போவதில்லை என்று கூறுகிறார் ஆஜாஜுத்தீன்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த குழந்தைகள் தனித் திறன் படைத்தவர்கள். இவர்களை அதற்கான பயிற்சி மையத்தில் சேர்த்தால் இன்னும் சிறந்து விளங்குவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

இவர்களின் சாகசம் தெருவோடு நின்றுவிடாமல், உலக அளவில் தெரியவைத்து, அவர்களுக்குப் பாராட்டுக்களைக் குவித்து விட்டிருக்கிறார்கள் இணையவாசிகள்..

Exit mobile version