மாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தோல்பாவைக்கூத்த பயன்படுத்தி மாணவர்களுக்கு கதை சொல்லும் பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் வித்யா மெட்ரிக் பள்ளியில், அழிந்து வரும் பாரம்பரிய தோல்பாவை கூத்து நடைபெற்றது. இந்த கலையை மாணவர்களிடையே கொண்டு சென்று, அவர்களது திறமையை ஊக்குவிக்கும் விதமாகவும், கதை சொல்லிகளாக மாற்றுவதற்காகவும், ஓவியத்திறமை மற்றும் நமது கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, புதுக்கோட்டை நெய்வாகல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் குழுவினரை கொண்டு தோல்பாவை கூத்தை நடத்தி வருகின்றனர்.

அழிந்து வரும் இந்த தோல்பாவை கூத்தை மீட்டெடுக்க அரசாங்கம் நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தோல்பாவை கூத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தோல்பாவை கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரியத்தை மாணவர்களுக்கு கொண்டுசெல்லும் இந்த பள்ளிக்கு பெற்றொர்கள் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version