குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ், விருதுநகரில் குழந்தை தொழிலாளர்கள் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 20 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் மூலம், 385 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 183 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை கல்வி, மதிய உணவு, மாதந்தோறும் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
தமிழக அரசின் சீரிய முயற்சியால் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி தெரிவித்தார்.