விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த யூபிஎஸ் எனும் நிறுவனம் கள ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம் பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் மோடி அலை வீசியது. ஆனால் தற்போது அப்படிப்பட்ட நிலை எதுவும் கிடையாது எனவும் மாநில தேவைகளே வெற்றியினை தீர்மானிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் இடம் குறைவாக இருந்தாலும், மோடிக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது என ஆய்வு கூறுகிறது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடியை காட்டிலும் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது. பாரதிய ஜனதா தன்னுடைய நலத் திட்டங்களை பிரசாரத்தில் முன்வைத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.