ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட மணற் சிற்பம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நாடெங்கும் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நதிநீர் இணைப்பு அத்தியாவசியமாகி விட்டது. ஜவர்கலால்நேரு பிரதமராக இருந்த காலத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தவில்லை. எனவே இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தியும், நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பள்ளிஆசிரியரான மணற்சிற்பக் கலைஞர் சரவணன், ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் அழகிய மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
காவிரி, வைகை, குண்டாறு ஆகியவை பானைவடிவிலும், அவற்றிலிருந்து பெருகும் நீர் அணையில்சேர்க்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடுவது போலவும் இந்த மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.