வீரர்களின் தியாகம் வீண்போகாது : மோடி உருக்கம்

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று தெரிவித்துள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பிரதமர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல பல்வேறு கட்சித்தலைவர்களும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனிடையே தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பீகார் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் பேசிய அவர் நிலைமையை கட்டுக்குள் வைக்க அலோசனை கூறியுள்ளார். நாளை, தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் ராஜ்நாத் சிங், காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version