சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் கார்த்திகை முதல் நாளில் மண்டல காலம் துவங்கியது. 41 நாட்கள் தொடர்ந்து பூஜை நடைபெற்ற நிலையில் நேற்றுடன் மண்டல காலம் நிறைவடைந்தது. நேற்று காலை 11.30 மணிக்கு சன்னிதானத்தில் தந்திரி களபம் எனப்படும் சந்தனத்தை பூஜித்து பிரம்ம கலசத்தில் நிறைத்தார். அது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து பிற்பகலில் ஆரன்முளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு சாத்தப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது. இரவு 11 மணியளவில் நடை சாத்தப்பட்டது.மகர விளக்கு பூஜைகளுக்காக 30ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.