நரேந்திர மோடி பெயரைச் சொல்லி கோஷமிடுபவர்களின் தாடைகளை உடைக்க வேண்டும் என்று கர்நாடக எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் அர்சிகரே பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதச்சார்பாற்ற ஜனதா தள எம்.எல். ஏ சிவலிங்க கெளடா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் யாராவது மோடி பெயரைச் சொல்லி கோஷமிட்டால் அவர்களுடைய தாடைகளை உடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியைச் எம்.எல்.ஏ வின் பொறுப்பேற்ற பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.