குட்டி ஜப்பான் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பறியது

எந்த தொழிலிலும் பெண்கள் இல்லாமல் அணு அளவும் அசையாது என்று சூழல் உருவாகி உள்ள தற்போதைய காலகட்டத்தில் சிவகாசியில் புகழ்பெற்ற பல தொழில்களிலும் பெண்களின் பங்கு அளப்பறியதாக உள்ளது. இதைப் பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் பட்டாசு, தீப்பெட்டி, கேலண்டர், அச்சு என பல்வேறு தொழில்களுக்கு பெயர் பெற்ற நகரம் சிவகாசி. குட்டி ஜப்பான் என்று தேசத்தின் முதல் பிரதமர் நேருவால் அன்போடு அழைக்கப்பட்ட நகரமும் கூட. எந்நேரமும் பரபரப்புடன் வேலைகள் நடந்த வண்ணம் உள்ள நகரத்தில் பெண்களின் பங்கு அளப்பறியது. இந்தியாவில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசில் மருந்து நிரப்புதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் என இத்தொழிலில் பாதிக்கு பாதி பெண்களின் பங்கு உள்ளது.

நாட்டின் 80 சதவீத தீப்பெட்டிகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவற்றில் பெட்டி செய்தல், காகிதம் ஒட்டுதல் தீக்குச்சி தயாரித்தல் என பெரும்பாலான வேலைகளை பெண்களே செய்கின்றனர்.

அச்சுத்தொழிலில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் சிவகாசி, நாட்டின் தேவைகளில் 60 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது என்று பெருமிதத்தோடு தெரிவிக்கலாம். இதில் காலண்டர் தயாரித்தல், புக் பைண்டிங் போன்ற தொழில்களில் 100 சதவிகிதம் பெண்கள் மட்டுமே உள்ளனர் என்பது தனிச் சிறப்பு.

Exit mobile version