அச்சத்தில் ஆழ்த்திய ஜாம திருடர்கள் ! ஒரே இரவில் 3 வீட்டில் திருட்டு !

சிவகாசி அருகே பிரபலமான ஊர்களில் ஒன்றான சித்துராஜபுரத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச்சேர்ந்த பத்மநாபன், சம்பவத்தன்று திருப்பதிக்கு சென்றிருந்தார். அவர் திருப்பதியில் இருக்கும் போதே ஊர்க்காரர்கள் அவரது வீட்டில் திருட்டு நடைபெற்றதாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியான பத்மநாபன், உடனே சொந்த ஊர் திரும்பினார். வீட்டில் உள்ள பீரோ திறந்த மேனிக்கு கிடந்தது, அதிலிருந்த 60 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் என பீரோவை மொட்டையடித்துச் சென்றிருந்தினர் ஜாம திருடர்கள். அவர் வீடு மட்டுமல்ல, அடுத்தடுத்து இருந்த 2 வீடுகளிலும் திருட்டு நடந்திருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். சந்தடியில்லாமல் புகுந்த ஜாம திருடர்கள் கதவை உடைத்து, 2 கிராம் தங்கநாணயம், 2800 ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தேவி நகரைச் சேர்ந்த சிவசிதம்பரம் என்பவர் பெங்களூர் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் வீட்டிலும் இரண்டரை கிராம் தங்க கம்மலை திருடிச் சென்றுள்ளனர். அருகில் உள்ள சிவகுமார் என்பவர் வீட்டு கதைவை உடைத்து பார்த்திருக்கின்றனர், பணமோ,நகையோ இல்லாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

ஒரே இரவில், 4 வீடுகளில் ஜாம கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்றிருப்பது. காவல்துறையின் மெத்தனபோக்கையே காட்டுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தகவல் கொடுத்தபின் வந்த போலீசார் அப்பகுதியில் கைரேகை மாதிரிகளை மட்டும் சேகரித்து சென்றுள்ளனர். முன்பெல்லாம் ரோந்து பணி தீவிரமாக இருக்கும், திருட்டும் கட்டுக்குள இருந்தது. ஆனால் விடியா ஆட்சியில் காவல்துறையினர் ரோந்து பணியை மறந்துவிட்டதாக, பாடுபட்டு சேர்த்த நகை பணத்தை இழந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version