பெண்ணிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை கிராம மக்கள் சிறைபிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்..
முத்தாலி என்னும் கிராமத்தின் அருகாமையில் சாலையோரம் டீக்கடை நடத்தி வருபவர் சரஸ்வதி, இவரின் கடையில் டீ குடித்து விட்டு நீண்டநேரமாக ஒருவர் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டீக்கடை நடத்தி வரும் சரஸ்வதி கிராமத்திற்க்குள் செல்ல சாலையில் நடந்து சென்றார். இதை நோட்டமிட்ட அங்கு நின்றிருந்தவன் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாளி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினான்.
உடனே அந்தப்பெண் கத்தி கூச்சலிட அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கொள்ளையனை விரட்டினர்.
நீண்ட தூரம் ஓடமுடியாத கொள்ளையன் சோர்வாகி நின்றுவிட விரட்டிய பொதுமக்கள் அவனை பிடித்து கிராமத்தின் முன்உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடிகொடுத்துள்ளனர், பின்னர் கிராமத்தினர் பாகலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்து கொள்ளையனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கொள்ளையனை மீட்ட பாகலூர் காவல்துறையினர், கொள்ளையனிடம் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் ஓசூர் மாநகர் தின்னூர் பகுதியை சேர்ந்த 30 வயதான ரவி என்பது தெரியவந்தது. பின்னர் அவனை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.