கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும்ன்னு சொல்லுவாங்க. இது மனிதர்கள் விசயத்துல நடக்குதோ இல்லையோ இங்க ஒரு பூனை விசயத்துல கரெக்டா நடந்துருக்கு. இந்த பூனை ஏற்கனவே மிகவும் பிரபலம்.
உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் கார்ல் லாகர்பெட். இவருக்கு ஒரு பூனை செல்லப்பிராணி . அதற்கு பெயர் சவ்பெட். எதிர்பாராதவிதமாக கார்ல் லாகர்பெட் கடந்த செவ்வாய்கிழமை மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்குப்பிறகு அவரின் சொத்துக்கள் அவரின் வளர்ப்பு பிராணியான சவ்பெட்-க்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், சட்டம் அனுமதி அளித்தால் சவ்பெட்டையே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.அந்தளவு அதன் மேல் அவர் பாசமழை பொழிந்துளார். மேலும், அவளின்(சவ்பெட்) நீலக் கண்களுடன் தாம் கண்களாலேயே அவ்வப்போது உரையாடுவதாகவும் வேடிக்கையாக தெரிவித்திருந்தார். தனது சொத்தில் தனது பூனைக்கும், அவர் மகன் உள்ளிட்ட வாரிசுகளுக்கும் சொத்துக்கள் உண்டு என விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், 1210 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை சவ்பெட் பூனையின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளதால் அதற்காக அறங்காவலர்களை நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.